• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 81சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

December 13, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது:-

தமிழகத்தில் 81சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். 2-வது தவணை தடுப்பூசி 51சதவீதம் பேர் போட்டுள்ளார்கள். தேசிய சராசரி 53 சதவீதம்.அதை விரைவில் நெருங்கி விடுவோம்.

எல்லோரும் தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கட்டாயப் படுத்தாமல் ஒவ்வொரு வரையும் நிலைமையை புரிந்து கொள்ளும்படி விளக்கி வருகிறோம். ஆங்காங்கே அதிகாரிகள் ஊசி போடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

டாஸ்மாக்குக்கு செல்பவர்கள் கட்டாயம் ஊசி போட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 லட்சம் பேரை கண்டிப்பாக ஊசிபோட வைக்க முடியும். அதேபோல் கல்லூரிக்கு வருகின்ற மாணவர்களுக்கும் கட்டாயம் ஊசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் எல்லோரையும் ஊசி போட வைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் செய்து வருகிறோம். ஒமைக்ரான் வைரஸ் முந்தைய கொரோனா வைரசை விட பல மடங்கு வேகமாக பரவுகிறது. நமது மாநிலத்தில் இதுவரை எதுவும் வரவில்லை. அதே நேரம் மற்ற மாநிலங்களில் பரவத் தொடங்கியிருக்கிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த நெருக்கடியான சூழலில் எல்லோரும் 2 தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்வது மட்டும்தான் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தவிர்க்க முடியும் என்பதை உணர்ந்து அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

மேலும் படிக்க