• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல்: 9 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்

May 19, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் நடக்கும் இடைதேர்தலில், காலை ஒன்பது மணி வரை நடந்த வாக்குப் பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம்தேதி நடைபெற்றது. இதற்கிடையில், தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. அதைப்போல் தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது.இந்த 4 தொகுதிகளில் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் அரவக்குறிச்சியில் மட்டும் 63 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சுமார் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து,இன்று காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.இந்நிலையில், நான்கு தொகுதிகளிலும் காலை ஒன்பது மணி வரை நடந்த வாக்குப் பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.காலை 9 மணி வரை தமிழக இடைத்தேர்தலில், சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் 11 சதவிகிதமும் ஒட்டப்பிடாரத்தில் 14.53 சதவிகித வாக் குப்பதிவும் அவரக்குறிச்சியில் 10.51 சதவிகிதமும் திருப்பரங்குன்றம் தொகுதியில் 12.05 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க