June 11, 2020
தண்டோரா குழு
மிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 23 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் பலியானோர் 2, அரசு மருத்துவமனையில் பலியானோர் 21. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று ஒரேநாளில் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 20,705 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 17,659 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 17,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இன்று 16,829 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,55,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.