June 27, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1939 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 68 பேர் உயிரிழந்தனர். இதன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 2,737 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் குணமடைந்தோர் எண்ணிக்கை 44, 904 ஆக உயர்ந்துள்ளது.