• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 2018ல் இயல்பை விட 24% குறைவாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

December 31, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

2018 ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 79 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 14 சதவிகிதம் குறைவாகும். தென்மேற்கு பருவமழை 28 செ.மீட்டர் பெய்துள்ளது. இது இயல்பைவிட 12 சதவிகிதம் குறைவு. வடகிழக்கு பருவமழை 34 செ.மீ., பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 24 சதவிகிதம் குறைவு. 2018-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் 4 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 59 சதவீதம் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களும் இயல்பை விட 50 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

5 மாவட்டங்களில் 40 முதல் 50 சதவீதத்திற்கு குறைவாக மழை பெய்துள்ளது. 5 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதத்திற்கு குறைவாக மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே வழக்கத்தை விட கூடுதலாக 11 சதவிகிதிம் மழை பெய்துள்ளது. 15 மாவட்டங்களில் 1 முதல் 19 சதவீதம் வரை குறைவான மழை பெய்துள்ளது. நீண்ட கால வானிலை அறிக்கையில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை என அவர் கூறினார். மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் எல்நினோ நிகழ்வு நடக்கவில்லை. அடிப்படை வானிலை நிகழ்வு சாதகம் இல்லாமல் போனதால் மழை குறைவாக பெய்துள்ளது. கஜா புயல் தவிர ஏனைய புயல்கள் மழையை தரவில்லை. சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 35 செ.மீ. மழையே பதிவாகி உள்ளது.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

மேலும் படிக்க