June 9, 2020
தண்டோரா குழு
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில்
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக, விசிக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இது தொடர்பாக சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு ஜூன் 11ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று
முதல்வர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி,
தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்தது. இதனோடு 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட இருந்தன. ஆனால், தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்துக்கான தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவ, மாணவிகள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்து 80% மதிப்பெண்ணும், பள்ளி வருகையை கணக்கில் எடுத்து 20% மதிப்பெண்ண் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். நிலுவையில் உள்ள 12-ம் வகுப்புத் தேர்வு குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.