May 16, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் தற்போதிருக்கும் வெப்ப அளவை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனல் காற்று வீசும் என்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.திருத்தணியில் 112 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.