April 20, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. இதுவரை 46,985 கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 6,109 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 41,710 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்
இன்றைக்கு புதிதாக 43 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 46. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457.உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.