• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் முழு ஊரடங்கை 2 வார காலம் நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை !

May 22, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் முடிவடைகிறது.இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவர் நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,“இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது” என்று பேசியுள்ளார்.

மேலும் படிக்க