• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் என்னென்ன..? – முதல்வர் பழனிசாமி இன்று அறிவிப்பு

August 30, 2020 தண்டோரா குழு

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட ஊரடங்குத் தளர்வுகளை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

எதெற்கெல்லாம் அனுமதி

இ.பாஸ் நடைமுறை ரத்து

இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

வழிபாட்டுத்தலங்கள் திறப்பு

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி

மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவு

கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு

அனைத்துக் கடைகளையும் திறப்பு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு.காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி

பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க அனுமதிமாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

கடைகளுக்கு புதிய வழிகாட்டுதல்

வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

டீக்கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதி

தமிழ்நாடு முழுவதும் தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

உணவகங்களுக்கு கூடுதல் நேரம் – அனுமதி

தமிழ்நாட்டில் உணவகங்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதிபார்சல் சேவை ஏற்கனவே உள்ளது போன்று, இரவு 9 மணி வரைத் தொடரும்.

தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளுக்கு அனுமதி

தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள்
உள்ளிட்டவை இயங்க அனுமதி

அரசு அலுவலகங்கள் முழு அளவில் இயங்கும்

வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும்

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும்

மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்

தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்குத் தடை

தமிழ்நாட்டில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும்கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு

சினிமா ஷூட்டிங்குக்கு அனுமதி

சினிமா ஷூட்டிங்குகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சினிமா ஷூட்டிங்குகளில் 75 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உத்தரவு

ஞாயிறு தளர்வற்ற ஊரடங்கு ரத்து

ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் தளர்வற்ற முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் ரத்து

பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு தடை

தமிழ்நாட்டில், பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை தடை தொடரும்

மாநிலங்களுக்கு இடையே, அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும், ரயில்களை இயக்க அனுமதி

விமான சேவை – புதிய அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை விரைவில் அறிவிப்பு

சென்னை விமான நிலையத்தில், வெளிமாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதி

சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில், தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க