June 8, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில்,பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 42
பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 17 பேர் (தனியார் மருத்துவமனை -3, அரசு மருத்துவமனை -14) பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.இன்று 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 17,527 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் 15,413 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 14,982 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 6,07,952 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 77 (அரசு 44 + தனியார் 33) பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.