September 1, 2020
தண்டோரா குழு
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டாலும் தமிழகத்தில் 60 தொகுதிகளில் வெற்றி பெரும் என பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்
மறைந்த முன்னாள் குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி உருவபடத்திற்கு கோவை பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் முருகன்,துணை தலைவர்கள் வானதி சீனிவாசன்,அண்ணாமலை, பொதுச்செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல் முருகன் மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் அரசியல் சிந்தனை,பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் சிறப்பாக இருந்ததாக கூறினார்.தமிழகத்தில் இளைஞர்கள் தொடர்ந்து பாஜகவை நோக்கி வருவதாகவும் மத்திய அரசால் தமிழகம் அதிகமான பொருளாதார பயனை அடைந்து வருவதாகவும் கூறினார். அடுத்து அமையும் சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் எனவும்
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டாலும் தமிழகத்தில் 60 தொகுதிகளில் வெற்றி பெரும் என்றார்.
மேலும்,தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகி இருக்கிறது.சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் அப்படி பார்த்தால் அனைத்து கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிந்திருக்க வேண்டும்.ரஜினி தேசியவாதி,ஆன்மீகவாதி அவர் வருகின்ற தேர்தலில் களம் கண்டால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.