June 5, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,405.பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,116 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 12 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம்,இன்று ஒரேநாளில் 861 பேர் குணமடைந்துள்ளனர்.இதுவரை மொத்தம் 15,762 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 12,697 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 15,692 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 5,60,673 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 74 (அரசு 44 + தனியார் 30) பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.