• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று வதந்தி பரப்பியவர் கைது

April 27, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என வதந்தி பரப்பியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக கடலோர மாவட்டங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர் போனில் பேசி திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில், முக்கியமான நகரங்களில் குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் இதற்காக நுழைந்துள்ளார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவலை கூறிவிட்டு, அந்த மர்ம நபர் போனை வைத்துவிட்டார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பெங்களூரு போலீசார் தமிழ்நாடு உள்ளிட்ட மேற்கண்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பினார்கள். இதையடுத்து தமிழக காவல்துறையினர் பாம்பன் பாலம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டது.

இதனிடையே தொலைப்பேசியில் பேசியவரை தேடிச் சென்று பெங்களூர் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வதந்தி பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பொய் தகவலை கூறி, தாக்குதல் குறித்து வதந்தி பரப்பியதாக லாரி ஓட்டுநர் சுந்தரமூர்த்தி என்பவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க