• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் ஜுன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு !

May 12, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதற்கிடையில், 10 ஆம் வகுப்பு பொது தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன், பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்றும், அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தத

இந்நிலையில்,இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்,

ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்.சுகாதார துறையினரின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும்.

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை

ஜூன் – 1 – மொழிப்பாடம்

ஜூன் 3 – ஆங்கிலம்

ஜூன் 5 – கணிதம்

ஜூன் – 8 அறிவியல்

ஜூன் 10 – சமூக அறிவியல்

மேலும் படிக்க