April 25, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 -ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 94 பேர் குணமடைந்தனர்.இதுவரை 960 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 52 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். மத்தியக் குழுவே இதைப் பாராட்டியுள்ளது என்றார்.