• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது! – ஒரேநாளில் 4343 பேர் பாதிப்பு

July 2, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
முதல்முறையாக 4,000ஐ கடந்தது.
தமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 62,598 ஆக அதிகரித்தது.இதன் மூலம் தமிழகத்தில் மொத்த
பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 57 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1321 ஆக அதிகரித்தது.
அதேசமயம் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம்
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்தது.

அறிகுறி இல்லாதவர்கள், இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அக்கறையுடன் சிகிச்சை நடைபெறுகிறது. முதியவர்கள், இதய நோய், கேன்சர் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. தமிழகத்தில் 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்.ஆர் தெரிவித்துள்ளது.

இவ்வாறு விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க