May 17, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,000ஐ கடந்தது
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு 6,750 ஆக உயர்ந்துள்ளது. பிற மாவட்டங்களில் இன்று 4,464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 639 பேரில் 73 பேர் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவர்கள். மேலும், கர்நாடகம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா இருவரும், தெலுங்கானாவில் இருந்து 3 பேர், ஆந்திரத்தில் இருந்து ஒருவரும் இதில் அடங்குவர்.
தமிழகத்தில் கொரோனாவால்இன்று மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,172 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 13,081 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.இதன்மூலம், இங்கு மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,26,720 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12,445. மொத்தம் பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,11,621. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.