April 30, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து சென்னையில் பாதிப்பு 906 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆக 2,323 அதிகரித்துள்ளது.இன்று 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,258 ஆக உயர்ந்துள்ளது.இன்று உயிரிழப்புகள் எதுவும் இல்லை. பலி எண்ணிக்கை 27 ஆக உள்ளது.தற்போது 1035 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது 31,375 பேர் வீட்டுக்கண்காணிப்பிலும், 40 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். இன்று மட்டும் 9,787 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.