• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்?

January 10, 2022 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இதுதொடார்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி,

“தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. முதலமைச்சர் ஆலோசனைப்படியும், கொரோனா தாக்கம் காரணமாகவும் அனைத்து பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்” என்று கூறினார்.

மேலும், தேர்வுகளுக்கு தயாராவதற்காகவே மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்படும்.விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க