October 21, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கடைகள் திறக்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி வரை கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
எதிர்வரும் பண்டிகை காலத்தினை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழகம் முழுவதும் முழுகட்டுப்பாடு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் தேநீர் கடைகள் மற்றும் அணைத்து கடைகள் வணிக வளாகங்களும் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகின்றன இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.