• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

April 8, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ்,கடந்த சில வாரங்களாக மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையானது, நேற்று ஒரே நாளில் மீண்டும் 4 ஆயிரத்தை நெருங்கியது.

இந்த நிலையில்,தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கவும்,அதனை கட்டுப்படுத்தவும் வரும் 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

அதன்படி,

*10.04.2021முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை

*வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஈ.பாஸ் கட்டாயம்

*வணிக வளாகங்கள், உணவகங்கள் , டீக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதி

*திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி,
திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை இல்லை.

*சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை கடைகளுக்கு தடை

*நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டுமே அனுமதி

*மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி

*டாக்ஸியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேரும், ஆட்டோவில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேரும் மட்டுமே பயணிக்க அனுமதி

*பூங்கா, அரங்கம், மற்றும் அருங்காட்சியம் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.*

*திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் , இறப்பில் 50 பேர் மட்டும் அனுமதி

*ஜவுளி கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி.

*ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசு.

மேலும் படிக்க