• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது – ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

October 28, 2021 தண்டோரா குழு

புதுச்சேரி தெலுங்கானா மாநிலங்களில் அரசின் செயல் திட்டங்கள் குறித்த தகவல்களை தான் கேட்டுப் பெற்று வருவதாகவும், அம்மாநில அரசுகள் முழு ஒத்துழைப்புடன் தகவல்களை வழங்கி வருவதாகவும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

104 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்திய அரசு சாதனை படைத்துள்ளது எனவும், உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகின்றது எனவும் தெரிவித்தார். நெருக்கடியான காலகட்டத்தில் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு 30 சதவீத ஆக்சிஜன் தயாரிப்பை வழங்கியதாக கூறிய அவர், தமிழக மக்களுக்கும் புதுச்சேரியில் பாகுபாடின்றி சிகிச்சை அளித்ததாக தெரிவித்தார்.

மாநில அரசின் செயல் திட்டம் குறித்து ஆளுநர் தகவல் கேட்டது தமிழகத்தில் சர்ச்சையாகி உள்ளது எனவும் தமிழகத்தில் எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி அரசுகளிடம் தானும் தகவல்கள் கேட்டு இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அடுத்த மாதம் 11ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் மத்திய அரசுக்கு கொடுப்பதற்காக மாநில அரசின் செயல் திட்டங்கள் குறித்த தகவல்கள் பெறப்படுகிறது எனவும் இது எதார்த்தமாக இயல்பாக நடந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்திருப்பதாக சொல்வது தவறானது எனவும் அங்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது எனவும் தெரிவித்த ஆளுநர் புதுவையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து டிஜிபியிடம் அறிக்கை கேட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.புதுவை உள்ளாட்சித் தேர்தல் சமூக நீதியுடன் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்காமல் இருக்கும் கட்சிகள் புதுவையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என பேசி வருகின்றனர் எனவும் தெரிவித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா அரசுகள் ஆளுநருக்கு தகவல் கொடுப்பதில் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க