May 4, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஆண்கள் 377 பேரும்,பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக
சென்னையில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,107ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,409 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்; இன்று ஒரே நாளில் 12,863 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழப்பு; கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.