• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு கொரோனா – 4 பேர் உயிரிழப்பு

May 22, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 694 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் இன்று 92 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 569 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று ஒரே நாளில் 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,128 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 4 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.தற்போது தமிழகத்தில் மொத்தம் 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று மட்டும் 12,653 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,85,185 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் படிக்க