May 2, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.இதுவரை 2,757 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 1,384 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அரியலூரில் 18,காஞ்சிபுரத்தில் 13, திருவள்ளூரில் 7,செங்கல்பட்டில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் 1,257ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 10,127 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.இதுவரை 1,39,490 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 29 பேர் குணமடைந்துள்ளனர்.மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி – இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.