June 1, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிதாக 1,162 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 1,162 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,112. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று உறுதி செய்யப்பட்டோர் 50.இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 967 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 11 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று ஒரேநாளில் 413 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 13,170 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 10,138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று மட்டும் மொத்தம் 10,964 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4,80,246 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.