• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்து கோவில்கள் மட்டும் இடிக்கப்படுகிறது – இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி !

August 27, 2021 தண்டோரா குழு

விநாயகர் சதூர்த்தி நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றால் தடையை மீறி நடத்துவோம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கடந்தாண்டு கொரோனா காரணமாக இந்து முன்னணியே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை நடத்தியது.தற்போது கொரோனா குறைந்துள்ளது.பல மதங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.பள்ளிகள் திறக்கப்படுகிறது. டாஸ்மாக் படு ஜோராக நடைபெறுகிறது.எனவே மக்கள் பாதிக்காமல் சமூக இடைவெளியுடன் இவ் விழாவை கொண்டாட எங்கள் மாநில நிர்வாக குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க 1.25 லட்சம் இடங்களிலும் கோவையில் 4 ஆயிரம் இடங்களிலும் விநாயகர் சிவைக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.ஆரம்பம் முதல் எதிர்ப்பை மீறிதான் இவ்விழாவை நடத்துகிறோம். இந்துக்களுக்கு விரோதமாக செயல்படவில்லை என்று திமுக அரசு கூறுகிறது. அப்படியென்றால் விழாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் இந்து கோவில்கள் மட்டும் இடிக்கப்படுகிறது.அதிகாரிகள் முதலமைச்சருக்கு தவறான தகவல் கொடுத்து திசை திருப்புகின்றனர்.கே.டி.ராகவன் சர்ச்சையில் ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளனர்.மதன் சரியில்லாத நபர்.பல ஊர்களில் பெண்களுடன் அலைந்துள்ளார்.அவரை டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும்.சம்மந்தப்பட்ட அந்த பெண்ணுக்கு பலரிடம் தொடர்பு உள்ளதாக கூறுகின்றனர்.கே.டி.ராகவன் இதனை சட்ட ரீதியாக நிரூபிப்பதாக கூறுகிறார். அவர் மேல் தவறு என்றால் அதனை இந்து முன்னணி கண்டிக்கும்.

திமுக அரசு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கிறது. ஆனால் மீட்ட இடத்தில் மசூதிக்கு வழி விடுகின்றனர்.திமுக ஹிந்து விரோத அரசாங்கமாக உள்ளது.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஆரம்பத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. திமுக அரசு சர்ச்சில் பெண்களை பாதிரியார்களாக பணி அமர்த்துவதற்கும், மசூதிக்குள் பெண்களை அனுமதிப்பதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா?அரசு அனுமதி கொடுக்கும் என்று நம்புகிறோம்.

இல்லையென்றாலும் தடையை மீறி விநாயகர் சதூர்த்தியை நடத்துவோம்.பேப்பர் கூழ், கிழங்கு மாவு கொண்டு சிலைகளை தயாரிக்கிறோம் அதனால் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது நீர்நிலைகள் மாசுபடாது.என கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின் போது இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார்,மாவட்ட தலைவர் தசரதன்,மாவட்ட செயலாளர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க