• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக முதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகம் !

December 12, 2018 தண்டோரா குழு

இந்தியாவிலேயே முதன்முறையாக முதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சளி, தொடர் இருமல், காய்ச்சல், உடல்வலி, மூச்சுத்திணறல் இருந்தால் அது நிமோனியா நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இருமல் அதிகரிக்கும் போது சிலருக்கு சளியில் இரத்தமும் கலந்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் காது மற்றும் மூளையை பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 50 வயதைக் கடந்தவர்கள் இதற்கான தடுப்பூசியை ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் என கூறியுள்ளது.

ஒரு சிலருக்கு மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் 2-வது தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் அரசு மானியம் பெறும் முதியோர் இல்லங்களில் தங்கி பயனடையும் முதியோரை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க சுகாதாரத்துறையினர் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நிமோனியா தடுப்பூசி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு கூறியுள்ளது. மூத்த குடிமக்களின் உதவிக்காக 1253 மற்றும் 1800-180-1253 சென்னை தவிர ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க