• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இதுவரை முறையான ஆவணங்கள் இன்றி 6 கோடியே 77 லட்சம் பறிமுதல் – தேர்தல் அதிகாரி

March 18, 2019 தண்டோரா குழு

17-வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுக்க மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக,அதிமுக என தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். மேலும் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.

இதற்கிடையில், நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர்,

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு என்ன ஏற்பாடுகள் செய்யவேண்டும், குறிப்பாக தேர்தல் அன்று மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வாக்கு எண்ணிக்கை குறித்த ஏற்பாடுகள் பற்றியும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறினார். மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்பாளர்கள் மேற்கொள்ளக்கூடிய செலவுகளை கண்காணிப்பதற்காக தேர்தல் செலவின பார்வையாளர்கள் நாளை தமிழகம் வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி 6 கோடியே 77 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்தும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக அவர் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, இதுவரை 1,48,206 தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் திருத்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 2,111 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க