June 20, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 2,396 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 2,396 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 1,254 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில்,இன்று மொத்தம் 1,045 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 31,316 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இதுவரை இல்லாத அளவாக இன்று 33 231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 24,822 பேர் சிகிச்சையில் உள்ளனர்.