• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – கமல்ஹாசன்

December 22, 2018 தண்டோரா குழு

தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 18 பேர், நிர்வாக குழு உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உட்பட 24 பேர் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை எப்படி எதிர்கொள்ளவது குறித்து ஆலோசனை நடந்தது.

இக்கூட்டத்திற்க்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,

நல்ல வழியில் நல்ல கூட்டணி அமையும். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம்.தமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது.

தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள மகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க