• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பு

May 11, 2019 தண்டோரா குழு

தமிழக உள் மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”சென்னையில் வெப்பம் இன்று (மே. 11)வெப்பம் அதிகரிக்கும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் சுட்டெரிக்கும். வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 14 உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், உள் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், தேனி மாவட்டதில் 3 சென்டி மீட்டர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க