• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தபால் வாக்கு விண்ணப்பம் பெறுவோர் சான்றுடன் வாக்குச்சாவடி அலுவலரிடம் வரும் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும்

March 6, 2021 தண்டோரா குழு

தபால் வாக்கு விண்ணப்பம் பெறுவோர் சான்றுடன் வாக்குச்சாவடி அலுவலரிடம் வரும் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டு தபால் வாக்கு
அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவர்கள் தபால் வாக்கு அளிப்பதற்கு அவர்களது இருப்பிடத்திற்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தங்களது விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு படிவம் 12-டி வழங்கப்படும். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் படிவம் 12-டியை பூர்த்தி செய்து அத்துடன் மாற்றுத்திறனாளிக்கான சான்றுடனும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுதியான அரசு மருத்துவ அலுவலரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றுடன் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்படும்.

தபால் வாக்கு வழங்க விருப்பம் தெரிவித்த வாக்காளர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் தபால் வாக்கு பெற்றவர் என்று முத்திரையிடப்படும் என்பதால் ஒரு முறை விருப்பம்தெரிவித்தப்பின் அதனை மாற்ற இயலாது. வாக்கு சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்கவும் இயலாது. பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12-டி படிவத்தினை
வரும் 15ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க