• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன்னம்பிக்கை நாயகன் ஜக்கு என்ற ஜெகதீஷ் காலமானார்

September 12, 2019 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த தன்னம்பிக்கை நாயகன் ஜக்கு என்ற ஜெகதீஷ் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

கோவையைச் சேர்ந்த இணையதள வடிவமைப்பாளர் ஜக்கு என்ற ஜெகதீஷ் (28).மாற்றுத்திறனாளியான இவர் தினமும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார். உடலில் உள்ள குறையை குறையாக நினைக்காமல் தன்னிடம் உள்ள திறமைகளை கொண்டு நிறைவாக வாழ்ந்தவர் என்று சொன்னால் மிகையாகாது.

இவர் சமூக சிந்தனையுடன் தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கையை நகர்த்தி வந்தார்.இவர் சமூக ஆர்வலர்,வலைப்பதிவாளர், இணையதள வடிவமைப்பாளர் ,எழுத்தாளர் என பல பரிணாமம் கொண்டவர். அதேபோல சிறந்த வாசிப்பாளர்,எழுத்தாளர்,கவிஞர், போன்ற பல அடையாளங்களையும் கொண்டவர். ஜெகதீஷ் கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளார். மேலும் கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து நண்பர்களிடம்,உறவினர்களிடமும் தான் சந்திக்கும் மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து உளவியல் ஆலோசனை, அவர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கி, அவர்களின் ஆற்றலை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்த உதவி வந்தவர் ஜெகதீஷ். இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம், ஜல்லிக்கட்டு போராட்டம் என சமூக பிரச்னைகளுக்காக நடக்கும் போராட்டத்தில் பங்கெடுப்பதிலும் முதன்மையாக் இருந்தவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பு கோவை வாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க