• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனி நபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்க வைப்பு!

January 14, 2019 தண்டோரா குழு

தனிநபர் வருமான உச்சவரம்பை 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளன.

தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை, மத்திய அரசு ரூ.5 லட்சமாக உயர்த்தயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்துக்கு விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற வுள்ளதால், வழக்கம்போல் இந்த முறை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படமாட்டாது. அதற்கு பதிலாக, வரும் பிப்ரவரி 1 -ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

அதில் முக்கிய அம்சமாக, தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை தற்போதுள்ள 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதமும், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க