ஓ.எல்.எக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் சந்தைகளில் மாடுகள் விற்பனை செய்ய விளம்பரங்கள் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யகூடாது என்று மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை குறித்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உழவர்களும் கால்நடை வர்த்தகர்களும் டிஜிட்டல் விற்பனை இடமான ஓஎல்எக்ஸ் மூலம் மாடுகளை விற்கத் தொடங்கியுள்ளனர். 1௦,௦௦௦ ரூபாய் முதல் 3௦௦,௦௦௦ ரூபாய் வரை ஓ.எல்.எக்ஸ் மூலம் நூற்றுக்கணக்கான மாடுகள் விற்கப்படுகிறது.
மே 26ம் தேதி, வட கிழக்கு இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் கேரளா மாநிலம் தவிர்த்து, இந்திய முழுவதிலும் மாடுகள் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விலங்குகளின் சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் புதுபிக்கப்பட்டது.
இந்திய முழுவதிலும் விவசாய நில உரிமையாளர்களுக்கு மட்டுமே மாடுகளின் வியாபாரம் அனுமதிக்கப்பட்டது. வேளாண்மை மீது தாக்குதல் என்னும் புதிய ஆட்சியை விவசாய்கள் பார்த்து வருகின்றனர். இந்த விதிகள் அடுத்த மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மே 26ம் தேதி முதல், ஓ.எல்.எக்ஸ் மற்றும் குய்க்கிர்(Quikr) போன்ற ஆன்லைன் சந்தைகள் மாடு விற்பனை விளம்பரத்தால் நிரம்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு