• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தடையை மீறி டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமியை கரம்பிடித்தார் சசிகலா புஷ்பா

March 26, 2018 தண்டோரா குழு

தடையை மீறி அதிமுக எம்பி சசிகலா புஷ்பா 2வது  திருமணம்.

நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா (வயது 41). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.

இதற்கிடையே சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் உள்ள லலித் ஓட்டலில் வருகிற 26-ந் தேதி வழக்கறிஞர் ராமசாமியை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதற்கிடையில்,  ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கில் குடும்ப நல நீதிமன்றம்  சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள தடை விதித்தது.

இந்நிலையில், முதல் கணவரை விவாகரத்து செய்த சசிகலா புஷ்பா ராமசாமி என்பவருடன்  தடையை மீறி 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார். டெல்லியில் நட்சததிர ஓட்டலில் சசிகலா புஷ்பா-ராமசாமி திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க