• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்க வென்ற கோமதிக்கு ஊக்கத்தொகையாக ரூ.15 லட்சம் வழங்கியது அதிமுக!

April 30, 2019 தண்டோரா குழு

தங்கம் வென்ற கோமதிக்கு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக ஊக்கத்தொகையை வழங்கினர்.

கத்தார் தலைநகர் தோஹாவில் 23வது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார்.

திருச்சி அருகே உள்ள கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து வந்து தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினரும், பெரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து, அவருக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிதியுதவி அளித்தது. இதையடுத்து,

கத்தார் தலைநகர் தோஹாவில் 23வது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார்.

திருச்சி அருகே உள்ள கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து வந்து தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினரும், பெரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முதல் நபராக நடிகர் ரோபோ சங்கர், வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கினார். இதைத்தொடர்ந்து, அவருக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிதியுதவி அளித்தது. இந்நிலையில், கோமதிமாரிமுத்து-க்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜ்-க்கு ரூ.10 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து கோமதி மாரிமுத்து-க்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினர்.

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கோமதி மாரிமுத்து உள்பட ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதனை படைத்த வீரா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடியவில்லை என்று தமிழக அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க