• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன் – திடீர் சந்திப்பு ஏன்?

December 17, 2018 தண்டோரா குழு

சில நாட்களாகவே அமமுக கட்சியில் பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் நிலையில் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இன்று திடீரென சசிகலாவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரிலுள்ள பரப்பன அஹ்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை டிடிவி தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ க்கள் இன்று சந்தித்தனர். சுமார் 20 நிமிடம் இவர்கள் சசிகலாவுடன் உரையாடினார்கள். அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி விலகி உள்ள நிலையில் திடீரென்று
இந்தசந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கிடையில், இந்த சந்திப்புக்கான காரணம் என்ன? கட்சி நிர்வாகிளுடன் இந்த சந்திப்புஏன்? என்று அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூரில் அவர் அளித்த பேட்டியில்,

என்னுடைய வளர்ச்சியை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆளும் கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சியும் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள் அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பதுபோல தெரியவில்லை. ஒருசிலர் அமமுகவை விட்டுசென்றதால் எந்தபாதிப்பும் இல்லை. ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சிலர் விலகிவிடுவதால் கட்சிபோய்விடும் என்றால், உலகத்தில் எந்தகட்சியும் இருக்காது. அதுமட்டுமின்றி, 6 மாதமாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை, அதனால் பார்க்க வந்தோம். எல்லோரும் சசிகலாவை பார்க்க ஆசைப்பட்டோம் அதனால் தான் இந்த நிகழ்வு. அமமுகவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. என்னுடைய விஸ்வரூபத்தை யாராலும் தடுக்க முடியாது. செந்தில் பாலாஜி நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியேற முடிவெடுத்துவிட்டார். அப்போதே என்னிடம் சிலர் இதுகுறித்து தெரிவித்தனர். ஆனால் நான் நம்பவில்லை.

தினமும் அமமுகவை விட்டு பலர் வெளியே செல்வதாக செய்திகள் வருகிறது. தினமும் 1000 பேர் சென்றுவிட்டார், 2000 பேர் சென்று விட்டார்கள் என்று கூறுகிறார்கள் எல்லாம் பொய். எங்கள் கட்சியில் ஒருகோடி பேர் இருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் விஷமிகள் இப்படி பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.
நாங்கள் தான் வெற்றி அதிமுகவினர் தோல்வி அடைந்த பிறகு எங்களிடம் வந்தால் சேர்த்துக்கொள்ளமாட்டோம். வரவேண்டும் என்றால் இப்போதே எங்களிடம் வந்து சேர்ந்துவிடுங்கள். நாங்கள் தான் இடைத்தேர்தலில் வெற்றிபெறபோகிறோம் என்று அதிமுக, திமுக, பாஜக, உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் இப்போதே எங்களிடம் வந்து விடுங்கள் என்று டிடிவிதினகரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க