• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் SRES பொதுச்செயலாளர் சூர்யப்பிரகாசம் அறிவிப்பு

February 28, 2019 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13 ம்தேதி டெல்லியில் இரயில்வே பணிமனை மற்றும் அனைத்து இரயில்வே தொழிலாளர்கள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறப்போவதாக கோவையில் SRES பொதுச்செயலாளர் சூர்யப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

கோவை போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள இரயில்வே பணிமனையின் நூறாவது ஆண்டு விழா நடைபெற்றது. மணிலால் காந்தி தலைமையில் நடைபெற்ற இதில் தங்கவேல்,சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் முன்னதாக SRES ன் மூத்த தலைவர் டி.வி்ஆனந்தன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.தொடர்ந்து சங்கத்தின் கொடியேற்றி நடைபெற்ற விழாவில் அகில இந்திய தலைவர்கள் பால கிருஷ்ணன், சூரிய பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய SRES ன் பொது செயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம்,

மத்திய அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.,இரயில்வே துறையில் வெளிநாட்டு மூலதனங்கள் வருவது மற்றும் தனியார் மயமாக்கல் ஆகியவற்றை கண்டிக்கிறோம்.
குறைந்த பட்ச சம்பளமாக இரயில்வே தொழிலாளர்களுக்கு 26,000 ரூபாய் ஒதுக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13 மற்றும் 26 தேதிகளில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

போராட்டம் வலுப்பெற்றால் இந்தியா முழுவதும் இரயில்களை நிறுத்தியும் போராட்டம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..

மேலும் படிக்க