October 10, 2017
தண்டோரா குழு
டெங்கு காய்ச்சல் தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற சுகாதார துறை சார்பில் தொலைப்பேசி எண்கள் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில்,பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல் பெற 104 என்ற எண்ணையும், 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களையும் 9444340496 / 9361482899 என்ற கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.