• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் டிவிஎஸ் எண்டார்க் 150 (TVS NTORQ 150) கோவையில் அறிமுகம்

October 7, 2025 தண்டோரா குழு

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவின் வேகமான, ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டரான டிவிஎஸ் எண்டார்க் 150-ஐ கோவையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

கோவையில் நடந்த அறிமுக விழாவில் டிவிஎஸ் மோட்டார்ஸ் கம்மூட்டர் ஸ்கூட்டர்ஸ் பிராண்ட் மேனேஜர் ரோனிகா,டிவிஎஸ் மோட்டார்ஸ் தமிழ்நாடு ஏரியா மேனேஜர் வினித், டிவிஎஸ் மோட்டார்ஸ் பிராண்ட் மேனேஜர் அபிநவ் ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.புதிய டிவிஎஸ் எண்டார்க் 150, அபாரமான ஆற்றல் கொண்ட 149.7cc ரேஸ்-டியூன் செய்யப்பட்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும்,ஆகாயத்தில் யாருடைய பார்வையிலும் அகப்படாமல் வேகமாக பறக்கும் ஸ்டீல்த் விமானத்தின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஸ்கூட்டர் புதிய தலைமுறையைச் சேர்ந்த இரு சக்கர வாகன சாகச ப்ரியர்களை திருப்திப்படுத்தும் வகையில் அபாரமான செயல்திறன்,கம்பீரமான ஸ்போர்ட்டி தோற்ற அழகியல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மிகச்சரியான கலவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அறிமுக விலை (எக்ஸ்-ஷோரூம், இந்தியா முழுவதும்) புதிய ஜி.எஸ்.டி.வரி மாற்றத்திற்கு பிறகு ஷோரூம் விலையாக ரூபாய் 1.09.400 ஒரு இலட்சத்தி ஒண்பாதயிரத்தி நானூறு ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.எப்போதும் பிரமிப்பைத் தூண்டும் டிவிஎஸ் எண்டார்க் -ம் கம்பீரமான கதையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 எதிர்கால ஸ்கூட்டர்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும்.

அதன் மல்டி பாயிணட் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஏரோடைனமிக் விங்லெட்டுகள்,கண்களைக் கவரும் வண்ணத்திலான அலாய் வீல்கள் மற்றும் சிக்னேச்சர் மஃப்ளர் நோட் ஆகிய அம்சங்கள் டிவிஎஸ் எண்டார்க் -ன் ரேசிங் டிஎன்ஏவை உறுதிப்படுத்துகின்றன.

அதே நேரத்தில் அலெக்சா மற்றும் ஸ்மார்ட்வாட்ச் ஒருங்கிணைப்பு, எங்கிருக்கிறோம் என்பதை கண்டறியும் லைவ் ட்ராக்கிங், வழிகாட்டும் நேவிகேஷன் வசதி மற்றும் ஓடிஏ புதுப்பிப்புகள் உள்ளிட்ட 50+ ஸ்மார்ட் அம்சங்களுடன் கூடிய உயர் துல்லிய டிஎப்டி கிளஸ்டர் இதன் வாகன பிரிவிலேயே மிகவும் மேம்பட்ட ஸ்கூட்டராக டிவிஎஸ் எண்டார்க் 150-ஐ களமிறங்க செய்திருக்கின்றன.

இந்த அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஹெட் கம்மூட்டர் & இவி பிஸினெஸ், ஹெட் கார்பொரேட் ப்ராண்ட் & மீடியா மூத்த துணைத் அனிருத்தா ஹால்டார் கூறுகையில்,

“இருபது மில்லியனுக்கும் அதிகமான எண்டார்க் ப்ரியர்கள் மற்றும் 50 டிவிஎஸ் எண்டார்க் உரிமையாளர்களால் சுயமாக நிர்வகிக்கப்படும் சவாரி குழுக்கள் மற்றும் சமூகங்கள், இந்தியாவின் மிகவும் விரும்பப்படும், முத்திரைப் பதிக்கும் ஆட்டோமொடிவ் பிராண்டுகளில் ஒன்றிற்கும் அதன் ரைடர்களுக்கும் இடையே நிலவும் ஒரு அற்புதமான உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகின்றன. டிவிஎஸ் எண்டார்க் 150 தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் புதிய யுக தொழில்நுட்பம் ஆகியவற்றின் மிகச்சிறந்த வெளிப்பாடாக உள்ளது. புதிய டிவிஎஸ் எண்டார்க் 150-ன் அறிமுகம், இன்றைய இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் உயர் செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் வேண்டும் என்ற விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் எண்டார்க் 150, அதன் ஹைப்பர் ஃபியூச்சரிஸ்டிக் வடிவமைப்பு, ஹைப்பர் டியூன் செய்யப்பட்ட செயல்திறன் மற்றும் ஹைப்பர் இணைப்புத் தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் முதல் ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் குணாதிசயங்கள் அதன் ரைடர்களை நிச்சயம் கவரும். பயணத்தின் போது சிலிர்க்க வைக்கும். இதன் மூலம் டிவிஎஸ் எண்டார்க் பிராண்ட்டின் மீதான ஆர்வத்தையும், ஆசையையும், உரிமத்தையும் பெருமளவில் அதிகரிக்கச் செய்யுமென நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’’ என்றார்.

மிகத் துல்லியமாக காட்டும் ஹை-ரெஸ் டிஎப்டி கிளஸ்டர் மற்றும் டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் உடன் பொருத்தப்பட்ட டிவிஎஸ் எண்டார்க் 150, அலெக்சா மற்றும் ஸ்மார்ட்வாட்ச் ஒருங்கிணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வாகனம் எங்கிருக்கிறது என்பதை கண்காணிக்கும் வெஹிகிள் ட்ராக்கிங், கடைசியாக நிறுத்தப்பட்ட இடம், அழைப்பு/செய்தி/சமூக ஊடக எச்சரிக்கைகள், சவாரி முறைகள், ஓடிஏ புதுப்பிப்புகள் மற்றும் தனிப்பயன் விட்ஜெட்டுகள் உள்ளிட்ட 50+ இணைக்கப்பட்ட அம்சங்களை வழங்குகிறது.

ஏபிஎஸ் இழுவைக் கட்டுப்பாடு இவ்வாகன பிரிவில் முதல் முறையாக அறிமுகம் – விபத்து மற்றும் திருட்டு எச்சரிக்கைகள், அபாய விளக்குகள், அவசரகால பிரேக் எச்சரிக்கை மற்றும் ஃபாலோ-மீ ஹெட்லேம்ப்கள் மூலம் நம்பிக்கையுடன் பயணிப்பதை உறுதி செய்கிறது. டிவிஎஸ் எண்டார்க் 150 இரண்டு வகைகளில் கிடைக்கிறது. டிவிஎஸ் எண்டார்க் 150 – ஸ்டீல்த் சில்வர், ரேசிங் ரெட், டர்போ ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. டிஎப்டி கிளஸ்டருடன் கூடிய டிவிஎஸ் எண்டார்க் 150 – நைட்ரோ கிரீன், ரேசிங் ரெட், டர்போ ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது.

மேலும் படிக்க