• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் 36 பேர் அனுமதி

August 14, 2019 தண்டோரா குழு

டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் சத்திய மங்கலத்தைச்சேர்ந்த 36 பேர் கோவை அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் 11 பள்ளி மாணவர்கள் தொண்டை அடைப்பான் என்ற டிப்திரியா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சத்தியமங்கலம் மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இந்நோயால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு தற்போது அப்பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதனையடுத்து இதே நோய் அறிகுறியுடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த 36 பேர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொண்டை அடைப்பான் நோய் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் மற்றும் ஈரோட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவியருக்கு டிப்திரியா டெட்டணஸ் தடுப்பு ஊசிகள் போடப்பட்டது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சத்திய மங்கலம் பகுதியில் இருந்து டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளி மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் இந்த வைரஸ் தடுப்பூசி போட தமிழக அரசு முன்வர வேண்டும். தொண்டை அடைப்பான் நோய் குறித்து போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க