• Download mobile app
02 Oct 2026, FridayEdition - 3887
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரன் – தொல். திருமாவளவன் திடீர் சந்திப்பு

November 27, 2018 தண்டோரா குழு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் திடீரென சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவுடன் தோழமை கட்சிகளாக விசிக, மதிமுக இருந்து வருகிறது. தேர்தல் சமயத்திலும் இக்கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மையில் திமுக பொருளாளர் துரைமுருகன் ஒரு பேட்டியில், தேர்தல் தேதி அறிவித்தபிறகுதான் கூட்டணி குறித்து பேச முடியும் என்றும், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் நட்பு கட்சிகள்தான், கூட்டணி கட்சிகள் இல்லை என்றும் கூறியிருந்தார். இதனால், இந்த கட்சிகள் திமுக கூட்டணியில் இல்லையா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், கஜா புயலால் சேதத்தை சந்தித்த புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க டிடிவி தினகரன் சென்றார். அப்போது, வழியில் திருமாவளவன் சந்திக்க, இருவரும் பேசிக்கொண்டனர்.இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் – திருமாவளவன் ஆகியோரின் சந்திப்பு புதிய கூட்டணி உருவாகிறதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க