• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருடன் சந்திப்பு

August 22, 2017 தண்டோரா குழு

டிடிவி தினகரன் ஆதரவு 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக ஆளுநரை சந்திக்க அவரது இல்லம் சென்றுள்ளனர்.

ஓ.பி.எஸ், இபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தன. இதில் ஓ.பி.எஸ்.,சுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் தீவிர அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்திக்க இன்று ஆளுநர் இல்லம் வந்துள்ளனர். இன்று விளாத்திக்குளம் எம்.எல்.ஏ., உமாமகேஸ்வரியும் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஆளுநர் மாளிகை வந்துள்ளார். இதனால் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் டிடிவி தினகரனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தும், தமிழக முதலமைச்சரை மாற்ற வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி கடிதம் ஒன்றை வலியுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க