September 18, 2017 
தண்டோரா குழு
                                அதிமுக(அம்மா) துனை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் முதல்வரை மாற்ற கோரியும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் கடந்த மாதம் ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். 
இதனிடையே எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.இதற்கு எம்.எல்.ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காத காரணத்தினால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.