• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார் நடிகர் ரஞ்சித்

February 27, 2019

பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் புதுச்சேரியில் டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார்.

நடிகர் ரஞ்சித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு மாநில துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சித் பாமகவில் இருந்து நேற்று விலகினார்.

இந்நிலையில், பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் புதுச்சேரியில் டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார். இளைஞர்கள் எதிர்பார்க்கும் தலைவர், நல்ல தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் இணைந்தேன். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவரை தேர்வு செய்துள்ளதாக நடிகர் ரஞ்சித் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க