• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்ற 6 பேரை பணி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

January 19, 2019 தண்டோரா குழு

டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேருக்கு பணி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிபி பதவி உயர்வுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் ஜாஃபர் சேட், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ்சுக்லா, மிதிலேஷ்குமார், தமிழ்ச்செல்வன், ஆசிஷ் பெங்க்ரா ஆகியோரின் பெயர்களை உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேருக்கு பணி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, டான்ஜெட்கோ ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை டிஜிபியாக ஸ்ரீலஷ்மி பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். அதைபோல், சிறைத்துறை டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவும், காவல்துறை தொழில்நுட்ப பிரிவு டிஜிபியாக தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை செயல்பாடு பிரிவு டிஜிபியாக ஆஷிஷ் பெங்ராவைவம், போலீஸ் அகாடமி திட்ட இயக்குநராக ஜாபர்சேட் ஐபிஎஸ்சையும் நியமித்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க