• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்திரவு

December 13, 2018 தண்டோரா குழு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த விஷ்ணுப்பிரியா, அதே ஆண்டு, நவம்பர் மாதம் 25ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார்கள் எழுந்த நிலையில், குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

இதை எதிர்த்து விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவிக்குமார் தொடர்ந்த ஆட்சேபனை மனுவை விசாரித்த கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் இன்று தீர்ப்பளித்தார். அதில்,மே மாதம் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை தள்ளுபடி செய்வதாகவும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க